இலவச மருத்துவ முகாம் : பொதுமக்கள் பங்கேற்கலாம்
உடுமலை: உடுமலை அபெக்ஸ் சங்கம், சிவசக்திகாலனி விரிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் கற்பகம் மருத்துவமனை சார்பில், நாளை, (16ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. முகாம், காலை, 10:00 மணி முதல் மதியம், 2:30 மணி வரை, தாராபுரம் ரோட்டிலுள்ள அமுதராணி திருமண மண்டபத்தில் நடக்கிறது. பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் பொது அறுவை சிகிச்சை சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என முகாம் ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.