உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  டிரான்ஸ்பார்மர் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

 டிரான்ஸ்பார்மர் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் பகுதிக்கு மின் வினியோகம் செய்ய டிரான்ஸ்பார்மர், பஸ் ஸ்டாப் கோவில் பின் அமைந்துள்ளது. இதிலிருந்து கே.செட்டிபாளையம், பாரதி நகர், ஏ.டி.காலனி, அரசு பள்ளி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், திறன் குறைந்து, மின் அழுத்தம் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. அடிக்கடி மின் இணைப்புகளில் பழுது ஏற்படுகிறது. எனவே, பலவீனமான டிரான்ஸ்பார்மரை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி