உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாட்டுக்கு வந்த ரோடு; பொதுமக்கள் நிம்மதி

பயன்பாட்டுக்கு வந்த ரோடு; பொதுமக்கள் நிம்மதி

அனுப்பர்பாளையம்; திருப்பூர், 24வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் உள்ள பள்ளி பழைய கட்டடத்தில், இயங்கி வந்தது. புதிய கட்டடம் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக, பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, 10 வகுப்பறை கட்டும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது. கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளி முன் ரோட்டின் குறுக்கே தகர கொட்டகை அமைக்கப்பட்டது. இதனால், ரோட்டின் மறு பக்கம் உள்ள மக்கள் சாமுண்டிபுரம் மெயின் ரோட்டுக்கு சுற்றி சென்று வந்தனர். இந்நிலையில், கட்டுமான முடிந்தும் கொட்டகை அகற்றப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து, பா.ஜ. சார்பில், மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கொட்டகை அகற்றப்பட்டு, ரோடு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி