உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமையுங்க! அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமையுங்க! அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

உடுமலை, : உடுமலையிலிருந்து, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, கொழுமம் செல்லும் ரோடு மாநில நெடுஞ்சாலையாக உள்ளது.ஏறத்தாழ, 18.80 கி.மீ., துாரம் அமைந்துள்ள இந்த ரோட்டில், நகர எல்லை குடியிருப்புகள், எஸ்.வி., புரம், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், மலையாண்டி கவுண்டனுார், சாளரப்பட்டி, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி உரல்பட்டி, சாமராயபட்டி, பாப்பான்குளம், கொமரலிங்கம், கொழுமம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் என, ,50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.பழநி தேசிய நெடுஞ்சாலையின் மாற்று வழித்தடமாகவும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் நுால் மில்கள், பேப்பர் மில்கள், தென்னை நார் தொழிற்சாலைகள் என ஏராளமான தொழிற்சாலைகளும் உள்ளன.பொது போக்குவரத்து மட்டுமின்றி, சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என போக்குவரத்து மிகுந்த ரோடாக உள்ளது. மேலும், பள்ளிகள், கல்லுாரிகள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளதால், இந்த ரோட்டில் நெரிசல் அதிகளவு இருக்கும்.இந்த ரோட்டில், நகரப்பகுதியில், அகல ரயில்பாதை அமைந்துள்ளது. தற்போது, அகல ரயில்பாதை, மின் வழித்தடம் அமைக்கப்பட்டு, ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.அதோடு, இதே பகுதியில் கூடுதல் ரயில் வழித்தடம், சரக்கு ரயில்கள் வந்து சரக்குகளை இறக்கி, ஏற்றும் வகையில் சரக்கு முனையம் என, பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ரயில்கள் வரும் நேரத்தில், உடுமலை - கொழுமம் ரோட்டிலுள்ள ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், இரு புறமும் பல கி.மீ., துாரம் அணிவகுத்து நிற்கின்றன.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மருத்துவ வாகனங்கள் செல்ல முடியாமல், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதித்து வருகின்றனர்.எனவே, கொழுமம் ரோட்டில், செல்லும் வாகனங்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி, உடனடியாக இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க, ரயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை