உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் கேட்டு சாலை மறியல் பொதுமக்கள் முன்னறிவிப்பு

குடிநீர் கேட்டு சாலை மறியல் பொதுமக்கள் முன்னறிவிப்பு

பல்லடம் : பல்லடம் நகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட வடுகபாளையம் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பல்லடம் நகராட்சி, 18வது வார்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, 2.90 லட்சம் லிட்டர் குடிநீர் கடந்த காலத்தில் வந்து கொண்டிருந்தது. சமீப நாட்களாக, 1.60 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனை சரி செய்து தருமாறு, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே, நாளை (11ம் தேதி) காலை, 10.00 மணிக்கு அனைத்து பொதுமக்களும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டம் செய்து நமது உரிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை