உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு

மாநில விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு

பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட உள்ள மாநில விளையாட்டு போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.வரும், 28ம் தேதி திருப்பத்துாரில் சதுரங்கம், நவ., 6 முதல், 11ம் தேதி வரை ஈரோட்டில் தடகளம், டிச., 5 முதல், 10ம் தேதி வரை திருச்சியில் பாரதியார் தின குழு விளையாட்டு (தடகள) போட்டியும், வரும், 2025, ஜன., 6 முதல் 11ம் தேதி வரை, குடியரசு தின குழு விளையாட்டு போட்டி மதுரையிலும் நடக்கிறது.கன்னியாகுமரியில் ஜூடோ, பீச் வாலிபால், திருநெல்வேலியில் சைக்கிள், நீச்சல், சென்னையில் ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஜன., 22 முதல், 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற, 38 மாவட்டங்களைசேர்ந்த வீரர், வீராங்கனையர், மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்பர்.போட்டி நடத்தும் மாவட்டம், குழுக்கள், உள்ளிட்ட விபரங்கள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் தரப்பில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ