உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேபிஸ் உயிர்ப்பலி; மக்கள் அதிர்ச்சி

ரேபிஸ் உயிர்ப்பலி; மக்கள் அதிர்ச்சி

நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாததால், சேவூரைச் சேர்ந்த தொழிலாளி அற்புதராஜ் என்பவர் பலியாகியிருக்கிறார். ''கடந்தாண்டு, தமிழகத்தில் ரேபிஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற, 40 பேரில் அனைவரும் இறந்துவிட்டனர்; தெரு நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாமல் இருப்பது தான், ரேபிஸ் நோய் தாக்கி உயிர்பலி ஏற்பட காரணம்' என்கிறது மாநில சுகாதாரத்துறை.இறைச்சிக்கடை காரணமா?முந்தைய காலங்களில் குடியிருப்புகளை ஒட்டி அல்லாமல், சற்று ஒதுங்கிய இடத்தில் தான் இறைச்சிக்கடைகள் அமைக்கப்படும். ஆனால், தற்போது அடர்த்தியான குடியிருப்புகளுக்கு இடையே இறைச்சிக்கடைகள் முளைக்கின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இறைச்சிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், இத்திட்டம் பெயரளவில் கூட இல்லை. திறந்தவெளியில் தான் இறைச்சிக் கழிவுகளை கடைக்காரர்கள் கொட்டுகின்றனர்.அப்பகுதி முழுக்க இறைச்சிக் கழிவுகளின் வாசம் வீசுவதோடு, ஏகப்பட்ட தெருநாய்கள் அந்த இறைச்சிக்கடையை சுற்றி வலம் வருகின்றன; பல தெரு நாய்கள் இறைச்சிக்கடை வளாகத்தை தங்களின் வசிப்பிடமாகவே மாற்றிக் கொண்டுள்ளன. அப்பகுதியில் ஓடி பிடித்து விளையாடும் குழந்தைகள், இரவில் பணி முடித்து வீடு திரும்பும் மக்கள், அதிகாலை நடைபயிற்சி செல்வோரை தெரு நாய்கள் விரட்டி கடிக்கின்றன. ஒரு வேளை அவை வெறிநாயாக இருப்பின், சில நாட்களில் ரேபிஸ் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்பட்டு விடும் என்கின்றனர் மருத்துவர்கள் சிலர்.'ரேபிஸ்' காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெரு நாய்கள் உலவுவதை தடுப்பதற்கான நிலையை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

வெறிநாய் எது?பொதுவாக, வெறிபிடித்த நாய்கள் கடித்தால் தான், ரேபிஸ் பரவும் என்ற சூழலில், சுற்றித்திரியும் தெரு நாய்களில், வெறி பிடித்த நாய் எது என்பதை கணிப்பதும், கண்டுபிடிப்பதும், சாதாரண மக்களுக்கு கடினமான விஷயம் தான். முன்பெல்லாம், தெருக்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தென்பட்ட தெரு நாய்கள், தற்போது குடியிருப்புகள் நிறைந்த வீதிகள், தெருக்கள் தோறும் நிரம்பியிருக்கின்றன. குடியிருப்புவாசிகள் அளிக்கும் உணவு, உணவின் மிச்சத்தை உண்டு, நாட்களை நகர்த்துகின்றன.இறைச்சிக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்டு பழகியிருக்கின்றன. மேலும், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், திறந்தவெளியில் சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களை ஒட்டிய பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இவற்றை தெரு நாய்கள் உண்பதால், அவற்றின் சுபாவமும் மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை