உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரவுடிகள் வீடுகளில் சோதனை: குற்றங்கள் தடுக்க போலீஸ் அதிரடி

ரவுடிகள் வீடுகளில் சோதனை: குற்றங்கள் தடுக்க போலீஸ் அதிரடி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரவுடிகள் உள்ளிட்ட பழைய குற்றவாளிகள், 70 பேரின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகிறது.திருப்பூர் மாநகரம், புறநகர் என, மாவட்டம் முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள், சிறையில் உள்ளவர்கள், ஜாமீனில் வெளியே வந்தவர்கள் உள்ளிட்டோரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே, மாவட்டம் முழுவதும் ரவுடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இரு கொலைகளுக்கு மேல், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் 'ஏ-பிளஸ்' பிரிவிலும், அவர்களுக்கு கீழே உள்ள ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் 'ஏ' பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் 'பி' மற்றும் 'சி' பிரிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், மாநகரில், 225 பேர், புறநகரில், 345 பேர் என, மாவட்டம் முழுவதும், 570 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.திருப்பூர் மாவட்ட போலீசில் உள்ள, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்களில் உள்ள முக்கிய ரவுடி, பல்வேறு தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்கள் என, 70 பேரின் தற்போதையை நிலை குறித்தும், மீண்டும் ஏதாவது குற்றங்களில் ஈடுபடுகின்றனரா என்பதை கண்டறியும் வகையில் அவர்களது வீடுகளில் சோதனை செய்ய திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டார்.டி.எஸ்.பி., தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 100 போலீசார் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் சப்-டிவிஷனுக்கு உட்பட பகுதியில் தற்போதைய நிலை குறித்து அறிய வீடுகளில் சோதனை செய்து விசாரித்தனர். தொடர்ந்து, வங்கி கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் குறித்து கண்காணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை