உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ்சுக்குள் மழை; பாதி வழியில் நிறுத்தம்

பஸ்சுக்குள் மழை; பாதி வழியில் நிறுத்தம்

உடுமலை அரசு போக்குவரத்து கிளைக்கழகத்தின் சார்பில், 57 டவுன் பஸ்கள், 36 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கிராமங்களுக்குச்செல்லும் பஸ்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.தேய்ந்து போன பட்டன் இல்லாத டயர்கள், கீழே தொங்கும் இருக்கைகள், தடுப்பு இல்லாத ஜன்னல்கள், கயிறு போட்டு கட்டிய டிரைவர் சீட் என, பல வித அவலங்களுடன் தான் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.குறித்த நேரத்தில், உதிரிபாகங்கள் வராததால், ஓரங்கட்டப்பட்ட டவுன் பஸ்களுக்கு மாற்றாக, போதிய பராமரிப்பு இல்லாத ஸ்பேர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய பஸ்களை இயக்குவதே டிரைவர்களுக்கு பெரும் சவாலாக மாறி விடுகிறது.கிராமத்துக்கு வரும் ஒரே பஸ்சும் போதிய பராமரிப்பில்லாமல் இருந்தாலும், வேறு வழியின்றி பயணிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.பஸ் மேற்கூரைகள் பராமரிப்பு இல்லாததால், மழைக்கு ஒழுகுகிறது. டவுன் பஸ்களுக்கு அடிக்கப்பட்ட வர்ணமும், கொஞ்சம், கொஞ்சமாக உரிந்து, பொலிவிழந்து காணப்படுகின்றன.அத்தனையும் சகித்து கொண்டு பயணிக்கும் போது, சிறு காயம் ஏற்பட்டால், காயத்துக்கு மருந்திட முதலுதவி பெட்டியில் மருந்து இருப்பதில்லை. அரசு பஸ்களில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், முக்கிய பொது போக்குவரத்து வாகனமாக அரசு பஸ்களையே மக்கள் நம்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை