உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலங்களில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்தி அதிகரிப்பு

பாலங்களில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்தி அதிகரிப்பு

உடுமலை; ரயில்வே தரைமட்ட பாலங்களில், மழை நீர் தேங்கி, வாகன ஓட்டுநர்கள் பாதிக்கும் நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையின் இருபுறங்களிலும், உடுமலை நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.அகல ரயில்பாதை பணிகளின் போது, இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக தரைமட்ட பாலங்கள், கட்டப்பட்டன. குறிப்பாக, பழனியாண்டவர் நகர் குடியிருப்புக்கு செல்ல பெரியார் நகர் பகுதியில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தை அதிகளவு, வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், அப்பாலத்தில், கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக இருப்பதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.கழிவு நீர் தேக்கத்தால், கொசுத்தொல்லையும் அதிகரித்து, அருகிலுள்ள குடியிருப்பில், நோய் பரவும் அபாயமும் உள்ளது. அப்பகுதியில், தேங்கும் நீரை வெளியேற்ற, மோட்டார் உட்பட உபகரணங்களுக்கும், அதற்கான அறையும் கட்டப்பட்டது.ஆனால், தேங்கும் நீரை முறையாக வெளியேற்றுவதில்லை. இதனால், மழைக்காலத்தில், பாலம் இருப்பதே தெரியாத அளவுக்கு, தண்ணீர் தேங்குகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடமும், ரயில்வே துறையிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன்பு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை