உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மா.கம்யூ. சார்பில் பேரணி

 மா.கம்யூ. சார்பில் பேரணி

திருப்பூர்: மா.கம்யூ., கட்சி சார்பில், 108வது நவம்பர் புரட்சி தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. மா.கம்யூ., கட்சி சார்பில், 108 வது நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது. மா.கம்யூ., கட்சியினரின் செந்தொண்டர் பேரணி, அவிநாசி ரோடு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து, ராயபுரம் வரை நடந்தது. மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், சீருடை அணிந்த கட்சியினர், மிடுக்குடன் நடந்து பேரணியாக சென்றனர். ராயபுரத்தில், பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், மாநில குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, தேசிய பொதுசெயலாளர் பேபி, சோவியத் யூனியனில் நடந்த நவ., மாத புரட்சி வரலாற்றை விளக்கி பேசினார். தொடர்ந்து, சர்வதேச, இந்திய அரசியல் சூழல் மற்றும் தமிழகம் மற்றும் கேரள அரசு திட்டங்கள் குறித்தும் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்