மேலும் செய்திகள்
31ல் நடக்கிறது 'கம்பன் விழா'
25-Aug-2025
திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராம கிருஷ்ணன் கூறியதாவது: 12ம் நுாற்றாண்டிலேயே புதிய இந்தியாவை கனவு கண்டவன் கவிச்சக்ரவர்த்தி கம்பன். கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடி கம்பன். தமிழகத்தில் உள்ள, 33 கம்பன் கழகங்களில், திருப்பூர் கம்பன் கழகம், மக்கள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் துவக்கி வைத்தது என்ற பெருமை பெற்றது. கம்பன் போதித்த அறவாழ்வு, தமிழ் இன்பம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் கம்பன் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று, (31ம் தேதி), மாலை, 4:30 மணிக்கு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபத்தில், கம்பன் விழா நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட குழுவினரின், ராமாயண நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு, 'வாகீச கலைவாணி' என்ற விருதினை, திருப்பூர் கம்பன் கழக தலைவர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வழங்குகிறார். தொடர்ந்து, 'கம்பன் காவியத்தில் எந்தத்தம்பி தங்கக்கம்பி' எனும் தலைப்பில் பாரதி பாஸ்கர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். கம்பன் விழா ஏற்பாடுகளை சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சிவராம், துணை செயலர் கவுசல்யா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
25-Aug-2025