உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை ரேஷன் குறைகேட்பு; பொதுமக்களுக்கு அழைப்பு 

நாளை ரேஷன் குறைகேட்பு; பொதுமக்களுக்கு அழைப்பு 

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம் நாளை (13ம் தேதி) நடைபெற உள்ளது. அவிநாசி தாலுகாவில் நடுவச்சேரி, தாராபுரத்தில் நவனாரி, மடத்துக்குளத்தில் நல்லண்ணக்கவுண்டர் புதுார், பல்லடத்தில் மாதப்பூர், திருப்பூர் வடக்கு தாலுகாவில் நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு தாலுகாவில் ஆண்டிபாளையம், உடுமலையில் அரசூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஊத்துக்குளி, காங்கயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல் ஆகியன மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை