உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திருமுருகன்பூண்டி - குப்பாண்டம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், ராக்கியாபாளையத்தை சேர்ந்த முத்தையன், 34 என்பதும், அவிநாசி, பழங்கரை, ஜெயம் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 1.7 டன் அரிசி, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை