உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிகரங்களை தொட்டு சாதனை சிகரம்

சிகரங்களை தொட்டு சாதனை சிகரம்

''இளம் வயதில், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான மலை சிகரங்களில் ஏறி, சாதனை படைக்க வேண்டும் என்பதே என் இலக்கு'' என சொல்கிறார், திருப்பூர் பெரியார் காலனி, ஜே.எஸ்., கார்டனை சேர்ந்த, 23 வயது இளைஞர் கனிஷ்.ஆப்ரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ; இந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (ஆரம்ப நிலை) மற்றும் மணாலியில் உள்ள 'யுனாய்மலை சிகரம்' ஆகியவற்றில் ஏறி முடித்திருக்கிறார்.நான்காவது மலையேற்ற பயணமாக ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த மலையான ரஷ்யாவின் 'மவுன்ட் எல்பிரஸ்' மலை சிகரத்தை தொட்டு, திரும்பியிருக்கிறார். இது, கடல் மட்டத்தில் இருந்து, 5,642 மீ., உயரம் கொண்டது.நம்மிடம் அவர் பகிர்ந்தவை:மலையேற்றத்துக்கு, ஸ்பான்சர்கள் உதவுகின்றனர். மலையேற்றம் மேற்கொள்ளும் ஊரில் உள்ள நிறுவனங்களின் வாயிலாக தான், பாதுகாப்பாக மலையேற்றப் பயணம் மேற்கொள்ள முடியும். என்னுடன், அந்நிறுவனத்தை சேர்ந்த 'கைடு' (வழிகாட்டி) உடன் வருவார்.முன்னதாக, அங்குள்ள 'பேஸ் கேம்ப்' குறித்து கற்று கொடுப்பர். பின், மலை சிகரத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை, நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இரு நாள் பயிற்சி வழங்குவர்.அதன் பிறகு தான், மலை சிகரம் ஏறினேன். உடலில் கயிறு கட்டி, கோடரி உதவியுடன் மலையேற வேண்டும்; ஒரு சாகச பயணமாகவே இது இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை