வாசகர்கள் கோரிக்கை
உடுமலை : உடுமலை நாராயணகவியின் நினைவாக, குட்டைத்திடல் அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது புத்தகம் வாசிப்புக்கான நுாலகமாகவும் பயன்படுகிறது.பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை நேரத்தில், 50க்கும் மேற்பட்ட வாசகர்கள் மண்டபத்தில் புத்தகம் வாசிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.தற்போது உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள போட்டித்தேர்வர்களும், இதை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.ஆனால், போட்டித்தேர்வர்களுக்கான புத்தகங்கள் இங்கு போதுமான அளவு இல்லை. இதனால், அவர்கள் முழுமையாக பயன்பெற முடியாத நிலை உள்ளது. மணி மண்டபத்தில் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை கூடுதலாகவும், அனைத்து வகை தேர்வுகளுக்கான புத்தகங்களும் இடம் பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.