மேலும் செய்திகள்
விளையாட்டு வீரருக்கு பாராட்டு
25-Oct-2024
திருப்பூர்: மாநில தடகள சங்கம் சார்பில், தடகள நடுவர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி,நிப்ட்-டீ கல்லுாரியில் நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தடகள சங்க செயலாளர் முத்துக்குமார், தொழில்நுட்பக்குழு சேர்மன் மனோகர்செந்தூர்பாண்டி முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலம் முழுதும் இருந்து, 105 உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.மாநில தடகள சங்கத்தின் தொழில்நுட்ப மேலாளர், ஸ்ரீநிவாசன், தொழில்நுட்ப துணை மேலாளர் விக்னேஷ்வரன் விளக்கினர். தொழில்நுட்பக்குழு துணை சேர்மன் இளங்கோவன் நன்றி கூறினார்.
25-Oct-2024