உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க

மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க

உடுமலை; உடுமலையிலிருந்து மூணார் செல்லும் வழிதடத்தில் போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பிரதான ரோட்டோரத்தில் புளியம் மரங்கள் உள்ளன. எலையமுத்துார் பிரிவு பகுதி முதல் அண்ணாநகர் பகுதி வரை ரோட்டோரத்தில் உள்ள புளியம் மரங்களின் கிளைகள் பல மடங்கு வளர்ந்துள்ளன. மரங்களின் அருகில் உள்ள தெருவிளக்குகளையும் மரக்கிளைகள் மறைத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் மாலை நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென போடிபட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ