உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி கிணற்றில் கழிவுகள் தேக்கம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

நகராட்சி கிணற்றில் கழிவுகள் தேக்கம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

உடுமலை: உடுமலையில், பள்ளி, வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள கிணற்றை துாய்மைப்படுத்த வேண்டும்.உடுமலை தளி ரோடு வணிக வளாகம், கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான பெரிய அளவிலான கிணறு உள்ளது.நகராட்சி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முன், நகர மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட இந்த கிணறு, தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.கிணற்றில், குப்பை, அபாயகரமான கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது, பல அடி உயரத்திற்கு நீர் உள்ள நிலையில், கழிவுகள் தேங்கியுள்ளதால், நீர் மாசடைந்துள்ளதோடு, துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சிக்கு சொந்தமான இந்த கிணற்றை துார்வாரி, பள்ளி, வணிக வளாகம் என பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை