உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த கோரிக்கை

உடுமலை ; பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், உடுமலை வட்டக்கிளை கூட்டம் உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் ரகோகத்தமன் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 75 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை