கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய அளவில் டவுன் பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. விபத்துகளும் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.