ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்புகளால், பயணியர் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவற்றை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில், பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.அங்குள்ள கடைகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல், நின்று கொண்டு அவதிப்படுகின்றனர்.