உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுந்தீவன உற்பத்திக்கு விதை; கால்நடைத்துறைக்கு கோரிக்கை 

பசுந்தீவன உற்பத்திக்கு விதை; கால்நடைத்துறைக்கு கோரிக்கை 

உடுமலை ; உடுமலை சுற்றுப்பகுதியில், பால் உற்பத்திக்காக, கறவை மாடுகள் வளர்ப்பு அதிகமாக உள்ளது. கிராமங்களில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் மாயமாகியுள்ளதால், மாடுகளுக்கு, விளைநிலங்களிலேயே பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, வழங்குகின்றனர்.இதற்காக பல்வேறு ரக தீவனப்பயிர்கள் கால்நடைத்துறை மற்றும் கோவை வேளாண் பல்கலை., யால், பரிந்துரைக்கப்படுகிறது.வேளாண் பல்கலை., யின், கோ.சி.என்., 4 எனப்படும், கலப்பின நேப்பியர் புல் ரகத்துக்கு கால்நடை வளர்ப்போரிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு ஹெக்டேரில், 380--400 டன்கள் கலப்பின நேப்பியர் பசும் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இத்தீவனப் பயிரில் அதிகப்படியான மென்மையான, ஈரப்பதம் அதிகம் கொண்ட கிளைகள் இருப்பதுடன், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்கும்.ஆண்டு முழுவதும் இப்பசுந்தீவனத்தை நீர்ப்பாசன வசதி இருக்கும் இடங்களில் அறுவடை செய்யலாம்.இத்தகைய தீவனப்புல் வகைகளுக்கான விதைகள், கரணைகள் கால்நடை வளர்ப்போருக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால், கால்நடை வளர்ப்போர் தங்களுக்குள், கரணைகளை மாற்றிக்கொண்டு, தீவனப்புல் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், போதியளவு விதைகள், கரணைகள் கிடைக்காமல், பசுந்தீவன உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.உடுமலை பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், கால்நடைத்துறை சார்பில், பயறு வகை, தீவன வகை, புல் வகை தீவனப்பயிர்களுக்கான விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை