உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனுவுக்கு சம்பந்தமில்லாத பதில் : தாசில்தார் மீது சமூக ஆர்வலர் புகார்

மனுவுக்கு சம்பந்தமில்லாத பதில் : தாசில்தார் மீது சமூக ஆர்வலர் புகார்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தாலுகா, நெருப்பெரிச்சலில், வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தனியார், திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டனர். 1.76 எக்டர் பரப்பளவுள்ள இந்த இடத்தில், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த செப். மாதம், அதே மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்பட்டது. அம்முகாமை வேறு இடத்தில் நடத்த கேட்டு, ஆக. 25ம் தேதி, கலெக்டர் மற்றும் முதல்வருக்கு, சரவணன் மனு அளித்திருந்தார். அதற்கு வடக்கு தாசில்தார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வடக்கு தாலுகாவில் வசிக்கும் சரவணன் என்பவர், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மனு அளித்துள்ளார். நத்தத்தில் போதிய இடம் இல்லை. வேறு தாலுகாவில் நிலம் கிடைக்கப்பெறும்பட்சத்தில், மனுதாரருக்கு முன்னுரிமை அடிப்படையில், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மனுவை படித்துக்கூட பார்க்காமல், பதிலளித்துள்ள தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி அமுதாவுக்கு, சரவணன் அனுப்பிய ் மனுவில், 'நெருப்பெரிச்சலில் திருமண மண்டபம் கட்டி, அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக, ஆக. 25ல், புகார் அளித்திருந்தேன். அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், மனுவுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பற்ற பதிலளித்துள்ள திருப்பூர் வடக்கு தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ