மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு
15-Aug-2025
உடுமலை; பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலையில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டக்கிளை தலைவர் ரகோத்தமன் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவர் தங்கவேல், வட்டக்கிளை துணைத் தலைவர் காளியப்பன், இணைச்செயலாளர் தண்டபாணி மற்றும் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
15-Aug-2025