ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
உடுமலை : தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் உடுமலை கிளையின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.செயற்குழு தலைவர் மணி தலைமை வகித்தார். உறுப்பினர் திருமலைசாமி வரவேற்றார். சங்க நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. ஆடிட்டர் மதன் வருமானவரி செலுத்துவதில் உள்ள நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.பத்ம சூர்யா இயற்கை மருத்துவமனை டாக்டர்கள் கோமதி, கவுசல்யா, இயற்கை மருத்துவம் குறித்து விளக்கினர். நகரின் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் முறையாக மூடப்பட வேண்டும்.ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு முன்னர் இருந்தது போல், கட்டண சலுகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ஞானபாண்டியன் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். துணைத்தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.