மேலும் செய்திகள்
29ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
19-Dec-2024
திருப்பூர்: திருப்பூர், ரேவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:ரேவதி கல்வி நிறுவனங்கள் மற்றும் ரேவதி அறக்கட்டளை சார்பில், நாளை (4ம் தேதி), அவிநாசியில் உள்ள ரேவதி கல்லுாரி வளாகத்தில், 'வெற்றி நிச்சயம் 2025' என்ற தலைப்பில் ஐம்பெரும் கல்வி வழிகாட்டி விழா, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.இதில், பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படுகிறது.அதற்கான போட்டி தேர்வும் நாளை நடக்கிறது. முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு, 25 சதவீதம், 60 சதவீதம் மதிப்பெண் பெறுவோருக்கு, 10 சதவீதம் 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படும். மருத்துவக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.பிளஸ் 2 மற்றும் 'நீட்' தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்குகிறார். தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது, பெற்றோரின் பொறுப்பு குறித்து, மனநல மருத்துவ நிபுணர் தீபக்குமார் பேசுகிறார். சிறப்பாக செயல்படும் ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு, 'அப்துல்கலாம் விருது' வழங்கப்படுகிறது.விழாவில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், சி.இ.ஓ., உதயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். விழாவில், பங்கேற்க அனுமதி இலவசம்.மாணவ, மாணவியரின் சிறப்பான எதிர்காலத்துக்கு வழிகாட்டும் இவ்விழாவில் பங்கேற்க, 98422 02288, 84899 68555 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம். மாணவர் மற்றும் பெற்றோருக்கு, கோவில் வழி, திருப்பூர் புதிய மற்றும் பழைய ஸ்டாண்டு, அவிநாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
19-Dec-2024