உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

 வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி: அவிநாசி தாலுகா அலுவலகம் முன், வருவாய்த்துறை அலுவலர்களின் சங்க கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் அலுவலர் கூட்டமைப்பு சங்க தலைவர் உஷாராணி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட கிளைச் செயலாளர் சுபாஷ், கிராம நிர்வாக முன்னேற்ற சங்க மாவட்ட பிரசார செயலாளர் துரைசாமி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் உட்பட பலர் பேசினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் கூடாது. ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !