உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயனாளிகள் பட்டியலில் திருத்தம்; தாயுமானவர் திட்டத்தில் எதிர்பார்ப்பு

பயனாளிகள் பட்டியலில் திருத்தம்; தாயுமானவர் திட்டத்தில் எதிர்பார்ப்பு

திருப்பூர்; வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், 'தாயுமானவர்' திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கடை ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கார்டுகளுக்கு நேரடியாக வீட்டில் சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அதன்படி, கடை ஊழியர்கள் பயனாளிகள் பட்டியலை தயார் செய்தனர். இத்திட்டத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: தற்போது இத்திட்டத்தில், வீடு வீடாக செல்லும் போது, சம்பந்தப்பட்ட முகவரியில் கார்டுதாரர் இல்லாமல் அவர்கள் பிரதிநிதியே பொருள் வாங்குகிறார். கார்டுதாரர் வெளியூர் சென்று விட்டார் என்கின்றனர். இது போன்ற கார்டுகளை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யலாம். ஒரே நாடு ஒரே கார்டு, என்ற திட்டம் காரணமாக, எந்தக் கடையிலும் பொருள் பெற்றுக் கொள்ளலாம். இதனால், யாரும் முகவரி மாற்றம் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. அடிக்கடி வாடகை வீடு மாறுவதால் முகவரி மாற்றம் செய்வதில்லை. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் கார்டில் பயனாளி இறந்து விட்டால் பொருள் வாங்க முடியாது. எனவே, ஒரு நபர் உள்ள குடும்ப அட்டை தொடர்ந்து ஆறு மாதங்கள் பொருள் வாங்காமல் இருந்தால் அதனை நீக்கம் செய்ய வேண்டும். இது தவிர வீடுகளுக்கு பொருள் வழங்கச் செல்லும் போது, வீட்டிலுள்ள வளர்ப்பு நாய்கள் அச்சுறுத்துவதால், உரிய பாதுகாப்பு வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை