வேர்களுக்கு விருது; விழுதுகளுக்கு மகிழ்ச்சி
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர், என ஆசிரியர்களின் பெருமையை திருவள்ளுவர் கூறுகிறார்.திருப்பூர் மாவட்டத்தில், அண்ணாதுரை தலைமைத்துவ விருதுக்கு மூன்று பள்ளி தலைமை ஆசிரியர்களும், அன்பழகன் விருதுக்கு இரண்டு பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அவ்வகையில், தலைமையாசிரியர்கள் விஜயலட்சுமி (ஊத்துக்குளி நகர் துவக்கப்பள்ளி), காளியப்பன் (சுண்டக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி), ஆனந்தி (பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி) ஆகியோரும், தாராபுரம் - எஸ்.காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்று திருச்சியில் நடக்கும் விழாவில், விருதுகளை பெற தலைமையாசிரியர்கள் சென்றுள்ளனர்.---விருது பெற்றது தலைமைஆசிரியர்கள் சொல்வதென்ன...நவீனத்துவத்துக்கு முக்கியத்துவம்நவீனத்துவத்துக்கு வகுப்பறை மாற வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கு லேப்டாப், தொடு திரை வாயிலாக புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். ஐ.சி.டி., வகுப்பறை ஏ.சி., வசதியுடன், 25 லேப்டாப் கொண்டது. ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கித் தந்துள்ளோம். இப்படி பல வசதிகள் உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் அட்மிஷன் உயர்கிறது.மொத்தம் 800 பேர் படிக்கின்றனர். எங்களது செயல்பாடுகளை பார்த்து கிராமப்புற பள்ளியில் இவ்வளவு பேர் வந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பள்ளி கல்வித்துறையின் ராதாகிருஷ்ணன் விருது பெற்றேன். 2016ல் 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது கிடைத்தது. துாய்மை பள்ளிக்கான விருது, புதுமையான கற்பித்தல் முறையை பாராட்டி புதுமைப் பள்ளி விருதுகள் பள்ளிக்கு கிடைத்துள்ளது. - காளியப்பன்சுண்டக்காம்பாளையம்---வாசிக்க வைப்பதே நோக்கம்பள்ளியில் காலணி வைக்க அலமாரி கட்டியுள்ளோம். வகுப்பறைக்குள் நுழையும் போது, காலணிகளை அதில் வைத்து விட்டுத் தான் வர வேண்டும். வாசித்தல் திறனில் தனி கவனம் எடுத்து கொண்டதால், எங்கள் பள்ளி குறித்து பெற்றோர் நல்ல விதமாக மாற்றவர்களிடம் தெரிவித்தனர். நடப்பாண்டில் ஒன்றாம் வகுப்பில், 68 பேர் இணைந்துள்ளனர்.மாணவர்களே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் செம்மையாக வாசிக்க செய்வதே எங்களின் முக்கிய நோக்கம். காய்கறி தோட்டம் அமைத்ததால், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளோம். 586 புரவலர்கள் பள்ளிக்கென உள்ளனர். அனைத்து வகுப்பறையிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளது. 2008ல் காமராஜர் விருது பெற்றோம்; சிறந்த எஸ்.எம்.சி., விருதும் கிடைத்துள்ளது.- விஜயலட்சுமிஊத்துக்குளி---கழிவுநீரில் மரம் வளர்ப்புஎங்கள் பள்ளியை பசுமை பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டுள்ளோம். ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒரு மாணவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை பராமரிப்பது, பாதுகாத்து வளர்ப்பது அவர்கள் பொறுப்பு. சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பள்ளி அளவில் பரிசு வழங்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் காய்கறித்தோட்டம் அறிய வகை மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் பசுமையாக இருக்க கழிவுநீர் மேலாண்மை வாயிலாக மரங்களை பாதுகாக்கிறோம். வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறுவோரை ஊக்குவிக்க, தரம் குறித்த 'பேட்ஜ்' வழங்கப்படுகிறது. அன்பழகன் விருது பெற்றதற்கு பள்ளியின் ஆசிரியர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வு, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்துவது தான் காரணம்.- மாரியப்பன்குமரலிங்கம்---எந்த போட்டியும் விடமாட்டோம்இலக்கிய மன்றம், சிறார் மற்றும் வானவில் மன்றம், வினாடி வினா போட்டி, தேன்சிட்டு இதழுக்கு படைப்புகள் அனுப்புவது, கலைத்திருவிழா போட்டியில் பங்களிப்பு, தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது உள்ளிட்ட என எந்த போட்டி, கல்வி சார்ந்த செயல்பாடாக இருந்தாலும், தவறாமல் எங்கள் பள்ளி பங்கேற்கும். அவ்வகையில், கல்வித்துறையின், 100 நாள் சவாலை ஏற்று, கணித அடிப்படை திறன் காட்டுவதில் இயன்ற உழைப்பை எங்கள் பள்ளி மாணவ, மாணவியர் காட்டியதால், அன்பழகன் விருது சாத்தியமாகியது. முக்கியமாக சொல்வதென்றால், அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பினால் இந்த விருது பெற முடிந்தது.பார்த்திபன்- எஸ்.காங்கயம்பாளையம்