உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஊத்துக்குளி : ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு பகுதியில் கடந்த, பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இந்நிலையில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., - காங்கயம் ரோட்டில் மேம்பாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி போலீசார், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை