உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை அரிப்பு; குட்டைகள் நிரம்பின

சாலை அரிப்பு; குட்டைகள் நிரம்பின

திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு எஸ்.பி. நகரில் ஐந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சேகர் என்பவரின் வீட்டு சுற்று சுவர் இடிந்து விழுந்தது. மாநகராட்சி, 16வது வார்டு வ.உ.சி., நகர், கே.ஜி., நகர், ஸ்ரீ நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏறத்தாழ, 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொருட்கள் அனைத்தும் சேதமாயின. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் லாரி மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர். மாநகராட்சி, 6வது வார்டு அறிவொளி நகர் மற்றும் ஜி.எம்., நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். உடனடி நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளை கேட்டு கொண்டார். கணக்கம்பாளையம் ஊராட்சி, ஆண்டிபாளையத்தில் கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. அதன் அருகில் உள்ள விநாயகர் கோவில் சுவர் மழையால் அரிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தது. காளிபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள புதுப்பாளையம், வெடத்தலாங்காடு, ஆசாரி தோட்டம், பெரிச்சான் தோட்டம் உள்ளிட்ட ஒன்பது குட்டைகள் நிரம்பியது.புதுப்பாளையம் ஏ.டி காலனியில் மழை நீர் சென்றதால், ரோட்டில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி