சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்
திருப்பூர், ; சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சென்னை கூத்துப்பட்டறையுடன் இணைந்து, சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வாதல் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில், மொபைல் போன் பேசிய படி வாகனம் ஓட்டுதல், ஏற்படும் பாதிப்பு, விபத்து போன்றவற்றை தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது. சாலை விபத்துக்களால் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போல வேடமணிந்து ஒருவர், ஹெல்மெட் அணிவது குறித்தும் என, பல வகையில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.