மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
29-Sep-2025
அவிநாசி: அவிநாசியில் மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படை, அவிநாசி போக்குவரத்து போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பெருமாநல்லுார் கே.எம்.சி., - அவிநாசி பழனியப்பா - விவேகா உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஊர்காவல் படை மண்டல தளபதி மனோகரன் வரவேற்றார். டி.எஸ்.பி., சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை மெயின் ரோடு வழியாக தாலுகா அலுவலகம் வரை பேரணி நடந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வனிதா நிகழ்ச்சிக்கான நன்றி கூறினார்.
29-Sep-2025