கருவலுாரில் சாலை விரிவாக்கம்; மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
அவிநாசி : அவிநாசி - மேட்டுப் பாளையம் சாலை விரிவாக்கப் பணிக்காக, கருவலுார் பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணி ஒரு வாரமாக துவங்கியுள்ளது.திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதான சாலையாக, அவிநாசி - ஆட்டையம்பாளையம், அன்னுார் சாலை உள்ளது.சாலையின் பல இடங்கள் பழுதாகி, அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மழை பெய்தால், ஆங்காங்கே மழைநீர் குளமாக தேங்கி நின்றது; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதித்தனர். தேசிய நெடுஞ்சாலை வசமிருந்த சாலை, தற்போது, மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, கருவலுார் பகுதியில் சாலையோரம், 400 மீ., துாரத்துக்கு, 30 மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.