உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம் 

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம் 

தாராபுரம்:தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாகக் கருதி பணப்பலன்கள் வழங்க வேண்டும்; பணிநீக்க காலத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்; தொழில்நுட்ப கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி