மேலும் செய்திகள்
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி மெக்கானிக் கைது
09-Nov-2024
திருப்பூர்: ராயபுரம் பூங்காவை மாலை நேரத்திலும் திறக்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில், இரண்டு இடங்களில் பூங்கா உள்ளன. குறிப்பாக, ராயபுரம் ரவுண்டானா அருகே, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா பொலிவுபடுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பூங்கா, கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மா.கம்யூ., ராயபுரம் கிளை சார்பில், 'ஒரு கோடி ரூபாயில் சீரமைத்த பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறக்க வேண்டும்' என்று பேனர் வைத்துள்ளனர். முழுமையாக பூங்காவை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'ராயபுரம் பூங்காவை திறக்க வேண்டுமென, மா.கம்யூ., சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு தான், சுத்தம் செய்து, காலை நேரம் மட்டும் திறக்கின்றனர். மாலை நேரம் திறப்பதில்லை; மின்விளக்கு மட்டும் எரிகிறது. சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, மாலை நேரமும் பூங்காவை திறக்க வேண்டும்,' என்றனர்.
09-Nov-2024