உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி சிறப்பு பஸ்களில் ரூ.1.13 கோடி கலெக் ஷன் 

தீபாவளி சிறப்பு பஸ்களில் ரூ.1.13 கோடி கலெக் ஷன் 

திருப்பூர் : ஐந்து நாட்கள் திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டதன் மூலம் திருப்பூர் மண்டலம், 1.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து அக்., 28 முதல், 30 ம் தேதி வரையும், நவ., 2 மற்றும், 3 ம் தேதி, 356 சிறப்பு பஸ்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது. அதிகபட்சமாக கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 300 வழக்கமாக டிரிப் உட்பட கூடுதலாக, 200 டிரிப் மூலம், 75 முதல், 90 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். குறைந்த பட்சமாக மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வழக்கமாக பஸ்கள் உட்பட, 250 டிரிப்களில், 45 முதல், 50 ஆயிரம் பேர் பயணித்தனர்.புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 200 வழக்கமாக பஸ் உட்பட, 150 சிறப்பு டிரிப் மூலம், 55 ஆயிரம் முதல், 65 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். போக்குவரத்து துறை கணக்கிட்டின்படி முதல் மூன்று நாட்களில், இரண்டு லட்சத்து, 5,000 பேரும், தீபாவளி முடிந்த இரண்டு நாட்களில், ஒரு லட்சம் பேர் என மொத்தம், 3.10 லட்சம் பேர் அரசு பஸ்சில் பயணித்துள்ளனர்.திருப்பூர் மண்டலத்தில் இருந்து மொத்தம் ஐந்து நாட்கள் சிறப்பு பஸ் இயக்கியதன் மூலம், 1.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை