உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தார் சாலை அமைக்க ரூ.44 கோடி ஒதுக்கீடு

தார் சாலை அமைக்க ரூ.44 கோடி ஒதுக்கீடு

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், மண் சாலைகளை, தார் சாலையாக மாற்ற, 44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மண்டல தலைவர் தெரிவித்தார். -திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம், அதன் தலைவர் கோவிந்தராஜ், தலைமையில் உதவி கமிஷனர் சக்திவேல், முன்னிலையில் நடைபெற்றது.கவுன்சிலர்கள் பேசியதாவது:தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,): கேத்தம்பாளையம்- காட்டன் மில் ரோட்டில் நான்காவது குடிநீர் திட்ட பணி மேற்கொள்ளப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக பேசி வருகிறேன். நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் கேட்கின்றனர். எப்போது பணி தொடங்கப்படும் என்பதை கூறுங்கள்.உதவி பொறியாளர் : இந்த மாத கடைசியில் பணி துவக்கப்படும்.இந்திராணி (அ.தி.மு.க.,): வார்டில் சில பகுதிகளில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. எங்க வீட்டுக்கே இன்னும் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. தெரு விளக்கு பகலில் எரிகிறது. இரவில் எரிவதில்லை. நாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. பிடிக்க வேண்டும். புகார் எண்ணுக்கு போன் செய்தால் யாரும் 'அட்டெண்ட்' செய்வதில்லை.செழியன் (த.மா.கா.,): எனது வார்டில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெறாமல் உள்ளது. தற்போது நிதி ஒதுக்கீட்டில் எனது வார்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. புதிய மின் விளக்கு பொருத்த வேண்டும்.மண்டல தலைவர்: பாதாள சாக்கடை விடுபட்ட இடங்களில் அமைக்கப்படும். இணைக்கப்பட்ட பகுதி வார்டுக்கு மட்டும் வளர்ச்சி பணி மேற்கொள்ள தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து உங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.புஷ்பலதா (அ.தி.மு.க.,) : எனது வார்டில் நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குழியை மூடி பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும். ஆனால் குழியை மூட தற்போது இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். குழாய் பதிக்க ஒப்பந்தம் எடுத்தவர்களை வைத்து ரோட்டை சீர் செய்ய வேண்டும்.மண்டல தலைவர்: திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் இரண்டு முதல் எட்டாவது வார்டு பகுதிகளில் உள்ள, 265 மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்ற, 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி அடுத்த வாரத்தில் துவக்கப்படும். 20 மற்றும் 30வது வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் வினியோகத்திற்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோட்டை சீரமைக்க, 20வது வார்டுக்கு இரண்டு கோடியே, 20 லட்சம் ருபாயும், 30வது வார்டுக்கு ஏழு கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூட்ட விவாதம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை