உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்; தொண்டர்கள் கம்பீர அணிவகுப்பு அவிநாசியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

அவிநாசியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்; தொண்டர்கள் கம்பீர அணிவகுப்பு அவிநாசியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

அவிநாசி : அவிநாசியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சேவூர் ரோடு, குலாலர் மண்டபம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்துக்கு, கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கொங்கு பண்பாட்டு மையம் ஆதன் பொன் செந்தில்குமார் துவக்கி வைத்தார். தாலுகா அலுவலகம், முத்து செட்டிபாளையம், கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப், சீனிவாசபுரம், கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மேற்கு ரத வீதியில் ஊர்வலம் நிறைவு பெற்றது.பின் நடந்த பொதுக்கூட்டத்தில், அவிநாசி வாகீசர் மடாலயம் திருப்புக்கொளியூர் காமாட்சி தாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். கணியாம்பூண்டி சூப்பர் சைசிங் மாரிமுத்து தலைமை தாங்கினார்.திருச்சி விபாக் சக பவுத்திக் ப்ரமுக் வழக்கறிஞர் இளங்குமார் சம்பத் பேசுகையில், ''பலவீனமான சமுதாயமாக நாம் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதாலே ஆர்.எஸ்.எஸ்., துவக்கப்பட்டது. ஒற்றுமையின்மையை, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி பலம் பொருந்திய சமுதாயமாக நாம் மாற்ற வேண்டும். அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., சேவகர் ஒற்றுமையால், சக்தியால் நம் பாரதம் உலகளவில் முதன்மையாக தலைமை ஏற்று நடத்தக்கூடிய வலிமை பெற்றுள்ளது.குடும்பம் பலமாக இருந்தால் தான் சமுதாயம் பலமாக இருக்கும். சமுதாயம் பலமாக இருந்தால் தான் நாடு பலமாக இருக்கும்.குடும்ப உறவுகளை மேம்படுத்த வேண்டும். இயற்கையோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும்'' என்றார். மாவட்ட தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
அக் 07, 2024 07:26

என்னவோ மத கலவரம் வரும் என்று திருட்டு திராவிட கும்பல் ஊளையிட்டது... எனது அனுபவத்தில் கல்லெறி கூட்டம் பேரணி ஆர்பாட்டம் என்றால் கண்டிப்பாக கலவரம் வரும் ... சமீபத்தில் கூட சுங்க சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று செய்தியாக வந்ததே...


சமீபத்திய செய்தி