ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை பாரத இயக்க மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.பள்ளி துாய்மை பணியாளர், தற்காலிக மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும், ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மார்ச், 2025 வரைய, நிலுவையின்றி முழுமையாக வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஊக்குவிப் பாளர்கள் தீபா, சாந்தி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர், பொதுசெயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர், போராட்டத்தை விளக்கி பேசினர்.