உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சகோதயா கூடைப்பந்து பெம் பள்ளி அசத்தல்

சகோதயா கூடைப்பந்து பெம் பள்ளி அசத்தல்

திருப்பூர் : கூடைப்பந்து போட்டியில், பெம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கிடையே மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற பெம் பள்ளி மாணவர்கள், 16 வயதுக்கு உட்பட்ட அணியும், 19 வயதுக்கு உட்பட்ட அணியும் வெகு சிறப்பாக விளையாடி, இரண்டாமிடத்தை கைப்பற்றியது.இரண்டாமிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் விஷ்ணு பழனிசாமி, செயலாளர் சரண்யா, பள்ளி முதல்வர் விஜய் கார்த்திக் மற்றும் பள்ளி மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி