சகோதயா பள்ளிகளிடையே விளையாட்டு போட்டி
உடுமலை : உடுமலையில், சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தன.பள்ளி மாணவர்களிடம் உள்ள விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.இந்நிலையில், உடுமலை, கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகன்டரி பள்ளியில், கோவை மண்டல அளவிலான சகோதயா பன்னாட்டு பள்ளிகளுக்கு இடையேயான, 45வது எறிபந்து (த்ரோ பால்) போட்டிகள் துவங்கின. 17 பள்ளிகளை சேர்ந்த, 250 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளி இயக்குனர் பானுமதி, முதல்வர் கவிதா துவக்கி வைத்தனர்.