உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பைக்கழிவு எரிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்த துாய்மைப்பணியாளர்கள்

குப்பைக்கழிவு எரிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்த துாய்மைப்பணியாளர்கள்

அவிநாசி: அவிநாசி பகுதி மக்களிடம் இருந்து குப்பைகளைத் துாய்மைப்பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இருப்பினும், வழங்கப்படாத குப்பைகளை நல்லாற்று நீர்வழிப்பாதையான சாலையப்பாளையம் செல்லும் பகுதியிலும், புது பஸ் ஸ்டாண்ட் கைகாட்டி பிரிவிலிருந்து சங்கமாங் குளம் செல்லும் வழியில் நீரோடை பகுதியிலும், ஆட்டையாம்பாளையம் செல்லும் வழியில் நல்லாற்று பாலத்தின் அருகிலும் பொதுமக்களும், நிறுவனத்தினரும் கொட்டிச்செல்கின்றனர். இது டன் கணக்கில் சேர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், இரும்பு, செம்பு கம்பிகள் என கழிவுகளில் இருந்து பிரித்து எடுத்து பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் பெறுவதற்காக சிலர் இரவு குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். அவை நாள் முழுவதும் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகின்றனர். ஒரே நாளில் நேற்று முன்தினம் மூன்று இடங்களில் தீ வைத்த சம்பவம் நடந்தது. இதுகுறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் வெளியானது. இதையடுத்து, அவிநாசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மேற்பார்வையில், துாய்மைப்பணியாளர்கள் தீ வைக்கப்பட்ட பகுதிகளில் மீதம் இருந்த குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை