துாய்மைப் பணியாளர் தொடர் போராட்டம்
திருப்பூர், ; திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத் தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள், 430 பேர், தனியார் கான்ட்ராக்ட் நிறுவன ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கடந்த இரு நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:கடந்த, 2021ல் கலெக்டர், 761 ரூபாய் குறைந்தபட்ச சம்பளமாக அறிவித்தார். ஆனால், 534 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பாதுகாவலர்களுக்கு, 380 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான குறைந்தபட்ச கூலித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த, 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.