உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி வாகனம் விபத்து; டிரைவருக்கு கவனிப்பு

பள்ளி வாகனம் விபத்து; டிரைவருக்கு கவனிப்பு

திருப்பூர்; ஊத்துக்குளியில் இருந்து தனியார் பள்ளி வாகனம் ஒன்று நேற்று காலை திருப்பூர் நோக்கி வந்தது. கருமாரம்பாளையம் அருகே வந்தபோது கார் மீது மோதியது. இதில், காரில் பயணித்தவர்கள் காய மடைந்தனர். பள்ளி வேன் டிரைவர் மதுபோதையில் இருப்பது தெரிந்து, பொதுமக்கள் 'தர்மஅடி' கொடுத்து, திருப்பூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் டிரைவர் ஆறுமுகம், 45 என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !