உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2ம் தேதி பள்ளிகள் திறப்பு 80 சிறப்பு பஸ் இயக்கம்

2ம் தேதி பள்ளிகள் திறப்பு 80 சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர், ; ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்ப வசதியாக, கூடுதல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. வெளியூர், சொந்த மாவட்டம் சென்ற பலர் திருப்பூர் திரும்ப ஏதுவாக, திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 35, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 மத்திய பஸ் ஸ்டாண்டில், 20 என மொத்தம், 80 சிறப்பு பஸ்கள் இன்று முதல் ஜூன், 1 வரை இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து திருப்பூர் வருவோரின் வசதிக்காக இன்று மூன்று, நாளை நான்கு பஸ்கள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பஸ்கள் சேலம், விழுப்புரம் வழியாக பயணிக்கும்.வழக்கமாக வாராந்திர சிறப்பு பஸ் இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் போது 'கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பஸ் இயக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்', மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். ஆனால், நடப்பு வாரம் பள்ளிகள் திறப்பு என்பதால், ' சிறப்பு பஸ்கள் இயக்கம் முழுமையாக இருக்க வேண்டும்; தேவைப்பட்டால் ஜூன், 2ம் தேதி காலை வரை பஸ்களை இயக்க வேண்டும்; எந்த வழித்தடத்தில் கூடுதல் நெரிசல் என்பதை உடனுக்குடன் கவனித்து பஸ் இயக்கத்தை அதிகப்படுத்திட வேண்டும்,' என, போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ