உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரன்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பிரன்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருப்பூர்: திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மழலைகளின் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், பங்கேற்ற மழலை மாணவ, மாணவியர் பட்டிமன்றம், நடனம், நாடகம் வாயிலாக உடல் நலன் சார்ந்த விஷயங்களை விளக்கினர். பல்வேறு வகையான தானியங்கள் குறித்தும் விளக்கினர். நம் உடல் உறுப்புகள் எவ்வாறு இயங்குகிறது, ஒவ்வொரு உறுப்பின் பயன் என்ன என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.தற்போதைய சூழலில், ஐம்பூதங்கள் எவ்வாறெல்லாம் மாசடைகிறது; அவற்றை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் பேசினர். கண்காட்சியில், காய்கறிகளால் செய்யப்பட்ட கோள்கள், உணர்வுகளின் உலகம், கதை கூறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மழலைகள் அசத்தினர்.மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, பொது அறிவு, உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த அறிவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மழலைகளை, பள்ளி தலைமையாசிரியை கமலாம்பாள், பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி