பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் ஆரியபட்டா செயற்கைக்கோள் வடிவமைக்கும் பயிற்சி பட்டறை, வரும் 19ம் தேதி நடக்கிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால், முதல் முறையாக அனுப்பப்பட்ட ஆரியபட்டா செயற்கைக்கோள் அனுப்பி, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்வுகள், நாடு முழுவதும் பல இடங்களில் நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பள்ளி மாணவர்களிடம் விண்வெளித்துறை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரியபட்டா செயற்கைக்கோள் வடிவமைக்கும் பயிற்சி பட்டறை, வரும் 19ம் தேதி நடக்கிறது.பயிற்சி பட்டறை, உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடக்கிறது.ஆரியபட்டா செயற்கைக்கோள் மாதிரி வடிவங்களை செய்து வரும் மாணவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.