உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி மாணவர் பேரவை பதவியேற்பு

எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி மாணவர் பேரவை பதவியேற்பு

திருப்பூர்; திருப்பூர், கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பதவியேற்பு விழா நடந்தது.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு பள்ளி தாளாளர் முருகசாமி, அறங்காவலர் திவ்யா சந்திர பாரதி, ஒருங்கிணைப்பாளர் தீபா சுப்பிரமணி மார்பு பட்டயம் அணிவித்து பொறுப்பேற்க வைத்தனர். முன்னதாக தேர்தலில், 5 முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் முறையாக வாக்களித்தனர். அதில், ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் உரிய போட்டிகளில் அதிக வாக்கு பெற்ற மாணவ, மாணவியர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் தாரணி, துணை முதல்வர் தீபா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !